உள்ளூர் செய்திகள்

டைம் பாஸ்: யூகப் புதிர்

இப்போது யூகித்துக் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு புதிர். இதற்குப் பேனா பேப்பர் உபயோகிக்கக் கூடாது. நீங்கள் ஒரு பேருந்தை ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.கவனமாகப் புதிரை வாசியுங்கள். சென்னை, தாம்பரத்தில் இருந்து கிளம்பும் பேருந்தில் பயணிகள் (25 ஆண்கள், 28 பெண்கள்) இருந்தனர்.குரோம்பேட்டை நிறுத்தத்தில் 5 ஆண்கள் இறங்கினர். 2 ஆண்கள் ஏறினர். 10 பெண்கள் இறங்கினர். 5 பெண்கள் ஏறினர். பல்லாவரத்தில் ஆண்கள் யாரும் இறங்கவில்லை. ஏறவும் இல்லை. பெண்கள் இருவர் இறங்கினர். நான்கு பெண்கள் ஏறினர். திரிசூலம் நிறுத்தத்தில் 6 ஆண்கள் இறங்கினர். 6 ஆண்கள் ஏறினர். 5 பெண்கள் ஏறினர். 2 பெண்கள் இறங்கினர். மீனம்பாக்கத்தை நோக்கி, பேருந்து போகிறது. இப்போது சொல்லுங்கள், பேருந்தின் ஓட்டுநர் பெயர் என்ன?விடைகள்: அதற்கான தகவலே கொடுக்கப்படவில்லையே என்று கேட்கப் படாது. பேருந்தை நீங்கள் ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளதே... உங்கள் பெயர்தான் ஓட்டுநர் பெயர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !