தீயாக மாறிய திபா!
இந்திய வீராங்கனை திபா கர்மாகர் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் சாதனை நிகழ்த்தியது ரசிகர்களுக்கு மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது. அற்புதமாகத் தனது திறமையை வெளிப்படுத்தினாலும் வெண்கலம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டு 4ஆவது இடம் பிடித்தார். தோல்வி குறித்து திபா கூறும்போது, “எவ்வளவு சிறப்பாகச் செயல்பட முடியுமோ அவ்வளவு சிறப்பாக செயல்பட்டேன். 5 அல்லது 6ஆவது இடம் பிடித்திருந்தால்கூட வருத்தமாக இருந்திருக்காது. 4ஆவது இடம் பிடித்ததே வருத்தமளிக்கிறது” என்றார்.