மலையேற்றச் சாதனை!
நேபாளத்தில் கும்பு பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் பழங்குடியினரான ஷெர்பாக்கள், மலையேற்றத்தில் வல்லவர்கள். இச்சமுதாயத்தைச் சேர்ந்த, கமி ரிதா ஷெர்பா (49), 23வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். “24 வயதில் முதன்முறையாக ஏறினேன். இன்னும் 2 முறை ஏறி சாதனை படைக்கத் திட்டமிட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.