மூளைக்கு அடியில் உலவிய கரப்பான்பூச்சி
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் செல்வி, 42. இவர் தூங்கிக்கொண்டிருந்த போது, திடீரென மூக்கில் பெரும் நமைச்சல் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில், ஏதோ ஒரு பொருள் மூக்குக்குள் அசைவதாக தெரியவந்தது. மேலும் சில மருத்துவமனைகளுக்குச் சென்றபோதும், சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரிக்குச் சென்றார் செல்வி. அவரைப் பரிசோதித்த மூத்த மருத்துவர்கள், மூளையில் அடிப்பகுதியில், கரப்பான்பூச்சி உலவிக்கொண்டிருப்பதைக் கண்டறிந்தனர். எனினும், அறுவை சிகிச்சை இல்லாமலேயே கரப்பான்பூச்சியை வெளியே எடுத்தனர். இதுகுறித்து மருத்துவர் சங்கர் கூறும்போது, ''12 மணி நேரம் உயிருடன் இருந்த கரப்பான்பூச்சி அகற்றப்பட்டு நோயாளிக்கு உடனடி நிவாரணம் கிடைத்துள்ளது. இது மிகவும் அரிதான நிகழ்வு,'' என்றார்.