உள்ளூர் செய்திகள்

பல்கலை. தேர்வுக்காக அனைத்துமே ஒத்திவைப்பு

தென் கொரியாவில் சுன்யுங் (Suneung) எனும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்காக, அந்நாட்டு அரசாங்கம் காட்டிய அக்கறை பிரமிக்க வைக்கிறது. தேர்வு நாளில், மாணவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க, அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அலுவலக நேரம், ஒருமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மாணவர்களை தேர்வறைக்கு அழைத்துச் செல்ல காவல்துறை வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. தேர்வு நேரத்தில் விமானங்கள் தரையிறங்கவும், புறப்படவும் தடை விதிக்கப்பட்டது. சுமார் 134 விமானங்களின் நேரங்கள் மாற்றப்பட்டன. இவ்வாண்டு சுமார் 5 லட்சத்து 95 ஆயிரம் மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். மாணவர்களின் தேர்வுக்கு தென் கொரியா கொடுக்கும் முக்கியத்துவம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !