வாகன பேட்டரி இஸ்ரோ உதவி
வாகனங்களில் பயன்படுத்தத்தக்க உயர் செயல்திறன் கொண்ட லித்தியம் அயன் (Lithium -Ion) பேட்டரி தொழில்நுட்பத்தை இஸ்ரோ அண்மையில் உருவாக்கியது. செயற்கைக்கோள்களில் இந்த பேட்டரிகளையே இஸ்ரோ பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரோவின் பேட்டரி தொழில்நுட்பத்தை, வாகன தயாரிப்பாளர்களோடு பகிர்ந்துகொள்ளுமாறு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. தற்போது, இதற்கு இஸ்ரோ சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், மின் வாகன துறையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ஏற்படும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.'லித்தியம் அயன் பேட்டரிகள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுவதால், அதன் விலை கூடுதலாக உள்ளது. மாறாக, அதை உள்நாட்டிலேயே மொத்தமாகத் தயாரிக்கும்போது, 80 சதவீதம்வரை கூட விலை குறையும்; இதனால், மின் வாகனங்களின் விற்பனை கூடுவதோடு, பெட்ரோல், டீசல் இறக்குமதியையும் குறைக்க முடியும்' என்று வாகனத் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.