உள்ளூர் செய்திகள்

அதிர்வு தாங்கிகள்!

ராக்கெட்டுக்கு அருகில், ஈஃபில் கோபுரம் போல (Eiffel Tower) ஒரு பெரிய கோபுரம் இருக்கும். கிளம்புவதற்குச் சில நொடிகள் முன்பு வரை, அவை ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். இவற்றில் எரிபொருள் மற்றும் மின்சார இணைப்புகள் இருக்கும். கடைசி நொடியில் ஏவுதல் ரத்தானால்கூட, ராக்கெட்டில் இருந்து எரிபொருளை உறிஞ்சி எடுக்க இவை உதவுகின்றன. இவை, மின்சாரம் பாய்ச்சினால் உடையும் பிணைப்புகளால் (Pyrotechnic bolts) ஆனவை. அவை உடைந்த உடன் ஸ்பிரிங் அமைப்புகளால், அந்த இணைப்புகள் ராக்கெட்டை விட்டு விலகும். ஆனால், அந்த விலகும் ஸ்பிரிங் விசை, கோபுரக் கட்டுமானத்தில் பாதிப்பு ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, அதிர்வு தாங்கிகள் (Shock Absorbers) உதவுகின்றன.இவை, தன் மீதான விசையை காற்று அல்லது ஒரு திரவத்தை இடம் மாற்றி, அந்த ஆற்றலை வெப்பமாக வெளியேற்றுகிறது. முதன்முதலில் நாசாவில், இத்தகைய அதிர்வு தாங்கிகள் வடிவமைக்கப்பட்டன. இவை பின்னர் கட்டடங்களுக்கும் பொருத்தப்பட்டன. தூண்களில் அதிர்வு தாங்கிகள் நிறுவப்படுகின்றன. இவை, நிலநடுக்கத்தின்போது ஏற்படும் விசையை வெப்பமாக வெளியேற்றி கட்டடங்களைப் பாதுகாக்கின்றன.நீளமாகவும் அகலமாகவும் அதிர்வு தாங்கிகளைச் செய்தால், அவை அதிக அளவு விசையைத் தாங்குகின்றன. - சிவா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !