விஜேந்தர் 5ஆவது வெற்றி
இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், பீஜிங் (2008) ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவர். கடந்த ஆண்டு முதல் தொழில்ரீதியிலான வீரராக உருவெடுத்தார். முதல் நான்கு போட்டியில் 'நாக் அவுட்' முறையில் வென்ற இவர், லண்டனில் நடந்த 5ஆவது போட்டியில் பிரான்ஸின் மட்டியோசி ரோயரை சந்தித்தார். மொத்தம் 6 சுற்றுகள் கொண்ட போட்டியில், விஜேந்தர் விட்ட குத்துகளுக்கு ஈடு கொடுக்க முடியாத ராயர் 5ஆவது சுற்றில் வீழ்ந்தார். இதனையடுத்து மீண்டும் 5ஆவது முறையாக 'நாக் அவுட்' வென்று அசத்தினார் விஜேந்தர்.