தொழில் பயிற்சி பாடம்
ஜன. 30 - பள்ளி பாடத் திட்டத்தில் தொழிற் பயிற்சிகள் சேர்ப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார். நாட்டில் திறன் மிக்க தொழிலாளர்களின் தேவை அனைத்துத் துறைகளிலும் அதிகளவில் தேவைப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் உள்ள பாடத்திட்டத்தில் தொழிற் பயிற்சிகளைச் சேர்ப்பது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.