குழந்தைகளுக்கு எச்சரிக்கை!
இன்று குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணும் தின்பண்டங்களில் குப்பை உணவுகளே (Junk Foods) அதிகம். இவ்வகை உணவுகளை அதிகமாக உண்ணும் குழந்தைகளுக்கு, ஒவ்வாமை, நீரிழிவு, நரம்புமண்டலக் கோளாறுகள் என, பல்வேறு உடல்நலச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் நல மருத்துவர்களின் ஐரோப்பியக் கூட்டமைப்பின் 52வது மாநாட்டில், சமர்ப்பிக்கப்பட்ட ஓர் ஆய்வுக் கட்டுரையில் இவ்விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.