கவனிங்க... - இளம் விஞ்ஞானி பயிற்சி
பள்ளி மாணவர்களுக்கான 'இளம் விஞ்ஞானிகள்' திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி வரை, www.isro.gov.in என்ற இணையதளம் வழியே இதற்காக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 9ஆம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள் இத்திட்டத்தில் சேரத் தகுதியானவர்கள். கிராமப்புற மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. மே மாதம் 2வது வாரத்தில் தொடங்கும் இப்பயிற்சியில், விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிக் கற்றுத்தரப்படுகிறது.