உள்ளூர் செய்திகள்

எளிமையை நாம் மதிப்போம்

எளிமையாக வாழ்வது என்பது தவறல்ல. பகட்டாகவே வாழவேண்டும் என்ற தேவையும் இல்லை. நம் பண்பாடு எப்போதுமே எளிமையைப் போற்றியே வந்துள்ளது. இன்றைய பரபரப்பான உலகில், எளிமையை நாம் மதிக்கிறோமா? என்ற கேள்வியை இங்கே எழுப்பி இருந்தோம். இதுகுறித்து, சென்னை, தாம்பரம், வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களின் குரல்களைப் பதிவு செய்துள்ளனர்.ர. ஹரீஷ், 8ஆம் வகுப்புஒரு காலத்தில் மதித்தோம் என்பது மட்டுமே உண்மை. நம் நாட்டில் காந்தியடிகள், காமராஜர், ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் எளிமையாக வாழ்ந்தனர். அவர்களை மதித்து உள்ளோம். ஆனால், இன்றைய தலைவர்களில் அப்படி எளிமையானவர்களைப் பார்க்க முடிவதில்லை.இ. நஸ் ரீன் பானு, 9ஆம் மதிப்புஎப்போதுமே மதித்தோம். எளிமையாக இருந்த பல தலைவர்களை இன்றும் நினைவு வைத்து, அவர்களின் பிறந்தநாள் எல்லாம் கொண்டாடுகிறோம். இன்றும் எளிமையானவர்களை மதிக்கிறோம். அப்படி இருந்தும், இன்றைய தலைவர்கள் ஏன் எளிமையாக இல்லாமல் போனார்கள் என்பது தெரியவில்லை. ச. அரவிந்தன், 8ஆம் வகுப்புஎளிய விவசாயிகளைப் பார்த்து, காந்தி மாறினார். அவரைப் போற்றியே வருகிறோம். அதுபோலவே விவசாயிகள் இன்றும் எளிமையாகவே வாழ்கிறார்கள். அவர்களை நாம் சரியாக மதிக்கிறோமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். எளிமையை மதிக்க இன்றை இளைய சமுதாயத்திற்குச் சொல்லித்தர வேண்டும். த.பிரவீன், 9ஆம் வகுப்புமதிப்பதில்லை. சின்னவயதிலிருந்தே எளிமையாக இருப்பவனை ஒதுக்கி வைத்தே தான் வளர்கிறோம். பசங்களின் மனசைப் பார்க்காமல், அவன் உடுத்தும் ஆடையைப் பார்த்தே மதிக்கும் போக்கு இருக்கிறது. நண்பர்களுக்கு இடையில் பார்க்காவிட்டாலும் அவங்க வீட்டுக்காரங்க வேறுபாடு பார்க்கிறாங்க.அ. ரோஸியா, 8ஆம் வகுப்புமதிப்பதில்லை. இப்ப, கல்யாணம் மாதிரியான விஷேசத்திற்கு செல்லும்போது, எளிமையான உடையில் சென்றால் மரியாதையே கிடைக்காது. விலை உயர்ந்த ஆடை, நகை நட்டு எல்லாம் அணிந்தால்தான் மரியாதையே! நம்மிடம் எவ்வளவு பணம் இருந்தாலும், அதைப் பகட்டாக வெளியே காட்டிக்கொள்ளாமல், நாம் எளிமையாக வாழப் பழகவேண்டும்.அ. வேதலட்சுமி, 7ஆம் வகுப்புஎளிமையை நாம் மதிக்கவேண்டும் எனத் தெரிந்தாலும், உண்மையில் அப்படி நடப்பதில்லை. உதாரணமாக உடன் படிக்கும் மாணவனோ, மாணவியோ எளிமையாக இருந்தாலும், ஏழ்மையாக இருந்தாலும் பலர் கொஞ்சம் ஒதுக்கத்தான் செய்கிறார்கள். இப்படி பாகுபாடு பார்க்காமல் நாம் வாழவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !