உள்ளூர் செய்திகள்

அமைச்சருக்குரிய தகுதிகள் என்ன?

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஏலாதி, அமைச்சருக்குரிய தகுதிகளைப் பட்டியலிடுகிறது. அதுகுறித்த பாடல் வருமாறு:குடியோம்பல் வன்கண்மை நூல்வன்மைக் கூடம்மடியோம்பும் ஆற்றல் உடைமை - முடியோம்பிநாற்றஞ் சுவைகேள்வி நல்லார் இனஞ்சேரல்தேற்றானேல் தேறு மமைச்சு (ஏலாதி பாடல்- 17)இதன்பொருள்:'குடிமக்களைப் அக்கறையோடு பாதுகாக்க வேண்டும். செயலாற்றுவதில் ஆற்றல் மிக்கவராய் இருக்க வேண்டும். பல நூல்களைக் கற்று வல்லமை உடையவராக இருத்தல் வேண்டும். சோம்பல் இல்லாமல் ஆட்சியைக் கவனித்துக் காத்து நிற்க வேண்டும். தனக்கு நன்மை அளிப்பனவற்றை விரும்பாமல், தீமையை உணரும் தெளிவுடையவனாய் இருக்க வேண்டும். இத்தகுதிகள் பெற்றிருப்பவரே அமைச்சராக முடியும். ஆளும் தகுதி உடையவராக இருக்க முடியும்' என்பதை உணர்த்துகிறது ஏலாதி. - முனைவர் க. அன்பழகன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !