நடந்ததும் நடக்கவேண்டியதும்!
காட்டுயிர்கள் இறப்பு, மனிதர் --காட்டுயிர் மோதல்கள் (Man- -Animal Conflict) கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு (2018) அதிகரித்துள்ளன. உயிரினங்கள் குறித்த அறிவியல் பார்வையற்ற பிற்போக்குத்தனமான பேச்சுகள் அரசுப் பதவிகளில் இருப்பவர்களிடமிருந்து வெளிப்பட்டது. மறக்க முடியாத சூழலியல் நிகழ்வுகள் * தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம், 'தண்ணீர் பற்றாக்குறை நகரமாக' கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது. பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவின் சில நகரங்களும் தண்ணீரற்ற நகரங்களாக மாறும் அபாயம் இருப்பதை ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. * இந்தியாவிலுள்ள 100-க்கும் மேற்பட்ட யானைகளின் வழித்தடங்கள் (Elephant Corridor) ஆக்கிரமிப்பில் உள்ளன. இச்சூழல், மனிதர் மற்றும் -யானைகளுக்கான மோதலை அதிகரித்துள்ளன. * இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தேனியின் குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ பற்றியது. இதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் இயற்கை வளங்களின் அழிவையும் எளிதில் மறக்க முடியாது. * இந்த ஆண்டின் தொடக்கத்தில் கென்யாவில் பாதுகாக்கப்பட்ட வெள்ளை காண்டாமிருகத்தின் (Northern White Rhinoceros - Ceratotherium simum cottoni) மிஞ்சிய கடைசி ஆண் வாரிசு, பரிதாபமாக இறந்தது. * சென்னையின் அடையாறு பகுதியில் உணவுக்காக புள்ளி மான்கள் சாலைகளில் அலைந்து, எச்சில் இலைகளில் இருந்த உணவை உண்டது வேதனை நிகழ்வு. இந்த ஆண்டின் மத்தியில் மதுரையில் 47 மயில்கள் கொல்லப்பட்டது, சூழலியலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. * மத்தியப் பிரதேசத்தில், 'அவ்னி' என்ற பெண் புலி (இரு குட்டிகளுடன் இருந்தது) சுட்டுக் கொல்லப்பட்டது. மனிதர்களைக் கொன்றதற்கான தண்டனை இது. அண்மைய பன்னாட்டு அறிக்கையொன்று உலக அளவில் 8 வகையான பறவையினங்கள் அழிந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது. * கஜா புயலின் பாதிப்பு, கால்நடைகள், விளைநிலங்கள், தென்னை மரங்களின் பேரழிவை ஏற்படுத்தியது.வரலாற்றுத் தீர்ப்புஊட்டியிலுள்ள மசினகுடி பகுதியில், 'யானைகளின் வழித்தடத்தை' ஆக்கிரமித்து கட்டியுள்ள சொகுசு பங்களாக்கள், தங்கும் விடுதிகளை அகற்ற உச்ச நீதிமன்றம் (10.8.2018) உத்தரவிட்டது. 'யானைகள் இந்தியாவின் சொத்து' என்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வார்த்தைகள் நம்பிக்கை தருகின்றன. 12 ஆண்டுகளுக்குப் பின் 2006-ஆம் ஆண்டிற்கு பின், 12 ஆண்டுகள் கழித்து சூழலியலாளர்களால் எதிர்பார்க்கப்பட்ட குறிஞ்சி மலர் பூத்தது. இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய 'நீலக்குறிஞ்சி'யைக் காண, உலகெங்கிலுமிருந்து நீலகிரிக்கு மக்கள் படையெடுத்தனர். என்ன செய்ய வேண்டும்?புத்தாண்டில் (2019) நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்களை அவற்றின் வாழ்விடத்தில் பாதுகாப்பதும், இயற்கை வளங்களை, தாவரங்களைப் பேணுவதும் நம் அடிப்படைக் கடமை. - ஏ.சண்முகானந்தம்