நான் யார்?
இந்திய விடுதலைப் போராட்ட வீரராகவும் புரட்சியாளராகவும் இருந்த என்னை 'மாவீரன்' என்று அழைக்கிறார்கள். ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போராடிய 'இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு' என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களுள் நானும் ஒருவர். என் பெற்றோர் சர்தார் கிஷன் சிங், வித்யாவதி. இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், லயால்பூர் மாவட்டத்தில் உள்ள 'பங்கா' என்ற கிராமத்தில் பிறந்து, லாகூரில் உள்ள பள்ளி ஒன்றில் கல்வி கற்றேன். என்னுடைய 13 ஆம் வயதில், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தேன். பிறகு, 1926ல் சுகதேவ், பகவதிசரண் வேரா, யஷ்பால் இவர்களுடன் இணைந்து 'நவ்ஜவான் பாரத் சபா' என்ற இளைஞர் அமைப்பை நிறுவினேன். ஆங்கிலேயர்கள், 1928ல் கொண்டுவந்த 'தொழில் தகராறு சட்ட வரைவு' என்ற சட்டத்தை எதிர்த்ததால் சிறை சென்றேன். 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்று முழக்கமிட்டதும் நான்தான்!விடை: மாவீரன் பகத்சிங்