உள்ளூர் செய்திகள்

யார் இந்தப் பெரும் புலவர்கள்?

கீழே உள்ள நான்கு பத்திகளும், நான்கு வெவ்வேறு பாடல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. நான்கு புகழ்பெற்ற புலவர்களைப் பற்றிப் பாடியவை. பாடியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. பாடலின் உள்ளே அவர்களைப் பற்றிய குறிப்பும் இருக்கிறது. அவர்கள் யார் என்று கண்டுபிடியுங்கள்.1. சங்கப் பலகையிலே - அன்றுதனிய மர்ந்த நூலாம்பங்கய நான் முகனே - தமிழில்பகர்ந்த மாமறையாம்.2. எவரும் போற்றிடவே - தமிழில்இராம கதைபுனைந் தோன்;புவனம் உள்ளளவும் - அழியாப்புகழ் பரந்திடு வோன்.3. நெல்லிக் கனியைத் தின்றுலகில்நீடு வாழும் தமிழ்க் கிழவி,வெல்லற் கரிய மாந்தரெல்லாம்வியந்து போற்றும் ஒருகிழவி.4. 'பாப்பாப் பாட்டி'லே - நெஞ்சைப்பறிகொ டுத்தேனடா!சாப்பா டேதுக்கடா! - சீனிசர்க்கரை ஏதுக்கடா!விடை:1. திருக்குறள், திருவள்ளுவர். திருக்குறள் சங்கப் பலகையில் வைத்து அரங்கேற்றம் செய்யப்பட்டது. திருவள்ளுவருக்கு நான்முகன் என்றொரு பெயரும் உண்டு.2. தமிழில் இராமன் கதையை எழுதியவர் கம்பர். அவரது புகழ் உலகம் உள்ளளவும் இருக்கும்.3. நூறு ஆண்டுகள் வாழக் கூடிய நெல்லிக்கனியை அதியமானிடமிருந்து பெற்றவர் ஒளவையார். அவரது பாடல்களை அனைவரும் போற்றிப் புகழ்கின்றனர்.4. பாப்பா பாட்டு பாரதி எழுதியது என்று எளிதாய்க் கண்டுபிடித்து இருப்பீர்கள். அவர் பாட்டு சீனியைப் போல் இனிக்குமாம். உணவுகூட வேண்டாமாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !