உள்ளூர் செய்திகள்

காற்றே... காற்றே...

உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்று. தாவரங்களுக்கும் காற்று தேவை. உயிரினங்கள், தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்-டை- ஆக்ஸைடு மிகவும் முக்கியம். தாவரங்கள் உணவு தயாரிக்க கார்பன்- டை -ஆக்ஸைடு என்ற கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராண வாயுவான ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. உயிரினங்கள் பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளிவிடுகின்றன. நாட்டின் வளர்ச்சிக்காக அழிக்கப்பட்ட காடுகள், தொழிற்சாலைகளின் அதிகரிப்பு, வாகனப் புகை போன்ற பல காரணங்களினால் காற்று மாசடைகிறது. உலக காற்று தினம் (World Wind Day) ஜூன் 15: காற்றின் ஆற்றலைக் கொண்டாடும் தினம் இது. காற்றின் ஆற்றல், காற்றை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.காற்று மாசுபாட்டால் தாவரங்கள், நிலம், நீர், நினைவுச் சின்னங்கள், கட்டடங்கள் முதலியவையும் பாதிக்கப் படுகின்றன.வளி, காற்று என்னும் இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்துகிறோம். எனினும் அறிவியலில் இவை வேறுவேறாகப் பொருள் கொள்ளப்படுகின்றன. தட்பவெப்பவியலில், காற்று அதன் வலு, வீசும் திசை ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடப்படும்.காற்று (wind) : வளி மண்டலத்தில் வளி (Gas) பெருமளவில் நகர்வதே காற்று. மாசு அடைந்த காற்றைச் சுவாசிப்பதால் என்ன ஆகும்?* கண் எரிச்சல்* தலைவலி* தொண்டைக்கட்டு* காய்ச்சல்* காச நோய்* ஆஸ்துமா* சுவாசக் கோளாறு* நுரையீரல் புற்றுநோய்* உரிய வயது முதிர்வுக்கு முன் இறப்பு (Premature Death)சூரியக் காற்று (Solar Wind): விண்வெளியில் சூரியனில் இருந்து வளிமங்கள் வெளியேறிச் செல்வது.கோள் காற்று (Planetary Wind): கோள்களில் இருந்து நிறை குறைந்த வளிமத் தனிமங்களின் வெளியேற்றம்.வன் காற்று (Gust): குறுகிய நேரம் நிலைக்கும் மிகவும் வேகமாக வீசும் காற்று. சூறாவளி (Squall): நீண்ட நேரத்துக்கு வீசும் பலமான காற்று. காற்று வேகமானி (அனிமோ மீட்டர் -/ Anemometer): காற்றின் வேகத்தை அளக்க உதவும் கருவி. சுழலும் கிண்ண அமைப்பு கொண்ட காற்று வேகமானிகளே பொதுவாகப் பயன்படுகின்றன. தமிழில் பண்டைக்காலத்திலிருந்தே வெவ்வேறு திசைகளில் இருந்து வீசும் காற்றுக்கு தனித்தனி பெயர் இடப்பட்டு உள்ளது.வாடை - வடக்கில் இருந்து வீசும் காற்றுசோழகம் - தெற்கில் இருந்து வீசும் காற்றுகொண்டல் - கிழக்கில் இருந்து வீசும் காற்றுகச்சான் (காற்று) - மேற்கில் இருந்து வீசும் காற்றுஓசோன் படலம்: வாயு மண்டலத்தில் உள்ள ஓசோன் படலம் சூரியனிலிருந்து வருகிற ஆபத்தான புற ஊதாக் கதிர்களை தடைசெய்கிறது. அதிகவேக விமானங்கள் வெளியிடும் அதிகப்படியான நைட்ரஜன் ஆக்ஸைடுகளும், குளிர்சாதனப் பெட்டி, தீயணைப்பான் போன்றவற்றிலிருந்து வெளிவரும் வாயுக்களின் மூலமாகவும் ஓசோன் படலம் சிதைக்கப்படுகிறது. இதன் விளைவாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தோல் புற்றுநோய் ஏற்படுகிறது.காற்றின் தரம்: காற்றில் உள்ள தூசி, புகை போன்ற நுண்துகள்களைக் (Fine Particles) கொண்டு அதன் தரம் அளவிடப்படுகிறது. 'PM 2.5', 'PM 10' என்று 2 வகையாக காற்றின் தரத்தை நிர்ணயிக்கின்றனர்.காற்றின் தோழன்: மரங்கள் கார்பன்டை ஆக்ஸைடை ஆக்சிஜனாக மாற்றுகிறது. மரங்களை வெட்டுவதால் நச்சு வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகரிக்கிறது. இதனால் காற்று மாசு ஏற்படுகிறது.வாகனங்கள்: வாகனப் புகை மூலமாக வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, பிற வாயுக்கள் காற்றில் நச்சுப் படலத்தை ஏற்படுத்தி சூழலைப் பாதிக்கின்றனஅமில மழை: தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கந்தகம், நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற வாயுக்களால் அமில மழை பெய்யும். இதனால் மண்ணின் அமிலத் தன்மை அதிகமாகிறது. நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் விவசாய உற்பத்தித்திறன் பாதிக்கப்படும். காற்றைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?* வீடுகளில் சமையலுக்கு தரமான எரிபொருள், சாண எரிவாயு பயன்படுத்தலாம். குப்பைகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.* வாகனங்களில் புகை வெளியேறும் அமைப்பை அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும். பொது வாகனப் பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும். எரிபொருள் தட்டுப்பாடு, காற்று மாசு, சாலை நெரிசல் போன்றவற்றை இது குறைக்கும்.* தொழிற்சாலைகளின் புகை வடிகட்டிகள், சுத்திகரிப்புக் கலன்கள் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, தூசி போன்ற கழிவுப் பொருள்கள் காற்றில் கலந்து மாசடைவதைத் தடுக்கலாம். பூமியைச் சூழ்ந்துள்ள வளி மண்டலம் பல வாயுக் கலவை உடையது.வளி மண்டலத்தில் நிறைந்துள்ள வாயுக்கள்79% நைட்ரஜன்20% ஆக்சிஜன்3% கரியமில வாயு1% இதர வாயுக்கள்காற்று திசை காட்டி: காற்று எங்கிருந்து உருவாகிறது என்பதைக் காட்டுகிறது.காற்று மாசு ஏற்படுத்துபவை:தொழிற்சாலைகள் > நைட்ரஜன், கந்தக ஆக்சைடு, புகைபெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள் > ஹைட்ரோ கார்பன்உலோகத் தொழிற்சாலைகள் > உலோக நுண்துகள்கள்ரசாயனத் தொழிற்சாலைகள் > கரிமச் சேர்மங்கள்வாகனங்கள் > கார்பன் மோனாக்சைடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !