உலகின் நீளமான கடல் பாலம்!
சீனாவில் பல மெகா நகரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளிலிருந்து, மக்களை இந்நகரங்களுக்கு இடம்பெயர வைக்க, அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. இடப்பெயர்வைத் துரிதப்படுத்த, அதிக அளவு உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில், சூகாய் நகரம் மற்றும் ஹாங்காங்கை இணைக்க, 55 கி.மீ. நீளத்துக்கு கடல் வழிப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் ஈஃபில் டவரில் பயன்படுத்தப்பட்டதைவிட, 60 மடங்கு அதிக அளவு ஸ்டீல் இப்பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடலின் உள்ளேயே, 6.7 கிலோமீட்டர் நீளத்தில் நான்கு சுரங்கப்பாதைகளும், செயற்கைத் தீவுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. 60 சதவீத பயண நேரத்தைக் குறைக்கும் இப்பாலம், கட்டுமான அதிசயங்களில் ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது. திட்டத்தின் மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாய்.