உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கான யோகப்பயிற்சிகள்

உஷ்ட்ராசனம் 'உஷ்ட்ரா' என்றால் ஒட்டகம். இந்த ஆசனம் செய்யும்போது, ஒட்டகத்தின் திமில் போன்று நமது உடல் அமையும் என்பதால், இந்த ஆசனத்துக்கு இப்பெயர்.செய்யும் முறை:• கால்களை நீட்டி நேராக நிமிர்ந்து உட்காரவும். • உள்ளங்கைகளை தரையில் தொடைக்கருகில் வைத்துக் கொள்ளவும். • வலது காலை மடக்கி, வலது குதிகால் மேல் அமர்ந்து கொள்ளவும்.• இடதுகாலையும் மடக்கி, இரண்டு குதிகால்களிலும் உட்கார்ந்து கொள்ளவும். • முட்டி போட்டு நின்று கொள்ளவும். இரண்டு முட்டிக்கும் இடையில் சிறிது இடைவெளி விட்டு நின்று கொள்ளலாம். ஒரு சாண் இடைவெளி போதுமானது.• கைகளைப் பின்பக்கம் கொண்டு சென்று, மூச்சிழுத்துக் கொண்டே பின்னே வளைந்து கைகளை குதிகால்களில் வைத்து, உடலை இடுப்பிலிருந்து வளைத்து, முட்டியில் உடல் பருமனை அழுத்தி நின்று கொள்ளவும். • பத்து முறை சீராக மூச்சை இழுத்து விடவும். • பிறகு மூச்சை வெளிவிட்டபடியே, கைகளை கால்களிலிருந்து எடுத்து நிமிர்ந்து வந்து, முட்டி போட்டு நின்று கொள்ளவும். • இரண்டு மூட்டையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.• இரண்டு குதிகால்களிலும் அமர்ந்து கொள்ளவும்.• இடது காலை நீட்டி அமர்ந்து கொள்ளவும்.• வலது காலையும் விடுவித்துக் கொள்ளவும். ஆரம்ப நிலைக்கு வரவும். சிறிது ஓய்வாக அமர்ந்து கொள்ளவும்.பயன்கள் • முதுகு, இடுப்பு வலுப்பெறுகிறது. • வயிற்றுத் தசைகள் ஓய்வு பெறுவதால், செரிமானம் நன்கு நடக்கிறது. • நரம்புகள் நன்கு தூண்டப்படுகின்றன. • தலைக்கு இரத்த ஓட்டம் அதிகரிப்பதால், ஞாபகசக்தி அதிகரிக்கிறது. • மூச்சு பிரச்னைகள் வராமல் தடுக்கமுடியும்.- ஆர்.தங்கலஷ்மி, விவேகானந்த கேந்திரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !