உள்ளூர் செய்திகள்

யோகா தியான ஆராய்ச்சித் திட்டம்

யோகா, தியானம் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்காக மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் 'சத்யம்' எனும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் 600-க்கும் மேற்பட்ட அறிவியல் ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து இந்த ஆராய்ச்சிக்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. மத்திய அரசின் இந்த ஆராய்ச்சித் திட்டத்தின் மூலம் இந்தியாவின் பொக்கிஷங்களாகக் கருதப்படும் யோகா, தியானம் பற்றிய பல்வேறு அறிவியல் ரீதியான நிரூபணங்கள் சர்வதேச அளவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !