யோகேஷ்வருக்கு யோகம்
இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் லண்டன் ஒலிம்பிக் (2012) 'ஃப்ரீஸ்டைல்' 60 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்யாவின் பெசிக் குடுகோவிடம் வீழ்ந்தார். பின் 'ரெபிசேஜ்' முறையில் யோகேஷ்வர் வெண்கலம் வென்றார். ஃபைனலுக்கு முன்னேறிய பெசிக், வெள்ளி கைப்பற்றினார். ஒலிம்பிக்கின்போது இவரிடம் எடுக்கப்பட்ட சிறுநீர் மாதிரியில் ஊக்கமருந்து இருந்தது சமீபத்தில் உறுதியானது. இதனால், இவரிடம் பறிக்கப்பட்ட வெள்ளிப்பதக்கம் யோகேஷ்வருக்கு தரப்பட்டது. ஆனால், கடந்த 2013ல் மறைந்த பெசிக் குடும்பத்தினரே பதக்கத்தை வைத்துக்கொள்ளுமாறு யோகேஷ்வர் பெருந்தன்மையுடன் தெரிவித்தார்.