உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / ஒரு மயக்கும் மலர் கண்காட்சி

ஒரு மயக்கும் மலர் கண்காட்சி

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி துவங்கியது, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்கள் மற்றும், காய்கறிகளால் மயில், நெருப்புக்கோழி, கரடி, டிராகன் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் அமைத்தவரின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் அற்புதமாக அமைந்துள்ளது. இவை மட்டுமின்றி இங்கே குவிந்து கிடக்கும் தெளிவான சிவந்த ரோஜாக்களையும், பிரகாசமான மஞ்சள் நிற சூரியகாந்தி பூவையும், மென்மையான இளஞ்சிவப்பான செர்ரி பூக்களையும் இன்னும் பல மலர்களையும் காணலாம். உயர்ந்து நிற்கும் க்ளாடியோலி முதல் சின்னஞ்சிறு பான்சிகள் வரை, ஒவ்வொரு மலரும் ஒரு கதை சொல்கிறது. பூங்காவில் வலம் வரும் போது​ காற்றில் மலர்களின் நறுமணம் வீசுவதை உணரலாம். இந்த மலர்க்கண்காட்சி நிச்சயம் உங்களை மயக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ