உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / ஐ ஆப் மெட்ராஸ்,சென்னையில் புகைப்பட கண்காட்சி

ஐ ஆப் மெட்ராஸ்,சென்னையில் புகைப்பட கண்காட்சி

சென்னை போட்டோ வாக் உறுப்பினர்கள் எடுத்த 217 படங்களைக் கொண்ட கண்காட்சி ஐ ஆப் மெட்ராஸ் என்ற தலைப்பில் சென்னை நுங்கம்பாக்கம் ஆர்ட்ஹவுசில் நடந்துவருகிறது.பதினைந்து வயதிற்கு மேற்பட்ட புகைப்பட ஆர்வலர்களைக் கொண்டு ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை 'போட்டோ வாக்' நடத்திவரும் சென்னை போட்டோ வாக் அமைப்பானது உறுப்பினர்கள் எடுத்த படங்களைக் கொண்டு ஒவ்வொரு வருடமும் புகைப்பட கண்காட்சி நடத்திவருகிறது.இந்த வருட மூன்று நாள் கண்காட்சி நேற்று துவங்கியது,நாளை 07/12/2025 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு துவங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது..அனுமதி இலவசம்.கண்காட்சியில் 162 பிரிண்டுகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளது,55 படங்கள் டிஜிட்டல் ஸ்கீரீன் மூலம் காட்டப்படுகிறது.-எல்.முருகராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ