உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / இரண்டாவது நாள் தியானத்தில் பிரதமர் மோடி

இரண்டாவது நாள் தியானத்தில் பிரதமர் மோடி

கன்னியாகுமரி அருகே முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் உள்ள பாறையில் 1892 ம் ஆண்டு,சுமார் 132 ஆண்டுகளுக்கு முன்பாக சுவாமி விவேகானந்தர் தியானம் செய்தார்.அமெரிக்காவில் நடந்த அகில உலக அனைத்து சமய மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் முன்பு, கன்னியாகுமரி வந்த விவேகானந்தர் இந்த பாறையில் அமர்ந்து தியானம் செய்துவிட்டு ஆன்மீக ரீதியாகவும், மன ரீதியாகவும் தன்னை வலுப்படுத்திக் கொண்டார். பின்பு அமெரிக்கா சென்ற அவர், சிகாகோ மாநாட்டில் சிறப்பாக பேசி ஹிந்து மதத்தின் அருமை பெருமைகளை உலகறிய செய்தார். இதன் காரணமாக இந்தப் பாறை பல்வேறு விதங்களில் எடுத்துக்கட்டப்பட்டது சிறப்பு கூட்டப்பட்டது.விவேகானந்தரின் பிரம்மாண்ட சிலையும் நிறுவப்பட்டது, அவர் தியானம் இருந்த அறை தியான மண்டபமாகியது. பிரதமராக இருந்த இந்திராகாந்தி உள்பட அகில இந்திய தலைவர்கள் பலர் விவேகானந்தர் பாறைக்கு வந்துள்ளனர்.இன்றைக்கு பிரதமராக வந்துள்ள மோடியும் ஒரு இளம் தலைவராக மூத்த தலைவராக இருந்த முரளி மனோகர் ஜோஷியுடன் 33 ஆண்டுகளுக்கு முன்பு வந்துள்ளார்.லோக்சபா தேர்தல் பிரச்சாரம் முடியும் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு அமைதியான இடத்திற்கு சென்று தியானத்தில் ஈடுபடுவது பிரதமர் மோடியின் வழக்கம் கடந்த முறை கூட கேதர்நாத் சென்றிருந்தார் இந்த முறை விவேகானந்தர் பாறைக்கு வந்துள்ளார். விவேகானந்தர் பாறைக்கு வருவதை எதிர்கட்சிகள் அரசியலாக்கியதை அடுத்து பிரதமரின் இந்த தியானம் முக்கியத்துவத்தை பெற்றுவிட்டது. நேற்று கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயில் சென்று அம்மனை வழிபட்டவர் பின் அங்கு இருந்து படகு மூலமாக கிளம்பி விவேகானந்தர் பாறைக்கு சென்றடைந்தார்.சிறிது நேரம் விவேகானந்தர் பாறையை சுற்றிப்பார்த்து விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செய்தவர் பின் உடனடியாக தனது தியானத்தை துவங்கினார்.முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் சூரிய உதயம் காண்பது என்பது இனிமையான அனுபவமாகும்.இதற்காகவே உலகின் பல பாகங்களிலும் இருந்து இங்கு சுற்றுலா பயணியர் வருவர்.விவேகானந்தர் பாறையில் இருந்து சூரிய உதயத்தை காண்பது என்பது என்பது அனைவருக்கும் கிட்டாத பெரும் பாக்கியமாகும்.இந்த பாக்கியத்தைப் பெற்றவராக பிரதமர் மோடி விவேகானந்தர் இருந்தபடி இன்று காலை சூரிய உதயத்தைப் பார்த்தவர் சூரிய நமஸ்காரம் செய்து பூஜைகளும் செய்தார்.பின் மீண்டும் தியான மண்டபத்திலும் விவேகானந்தர் மண்டபத்திலுமாக தனது தியானத்தை தொடர்ந்து வருகிறார்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை