உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / போராடி தோற்ற இந்திய பெண்கள் அணி

போராடி தோற்ற இந்திய பெண்கள் அணி

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான பெண்கள் இருபது ஒவர் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பிற்கு குறைவின்றி நேற்று நடைபெற்றது.டாசில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்து இந்திய அணியின் பந்து வீச்சு சோபிக்கவில்லை எளிய பல கேட்ச்களைக்கூட தவறவிட்டனர்,நாற்பது ரன்களுக்கு ஒரு விக்கெட் விழுந்தாலும் வெற்றிக்கான நம்பிக்கை தரக்கூடிய ரன்களை தென்னாப்பிரக்க வீராங்கனைகள் எடுத்தனர்.லாரா நல்ல துவக்கத்தை கொடுக்க பிரிட்ஸ்,காப் ஆகிய வீராங்கனைகள் நின்று நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர்., ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீராங்கனை ஷபாலி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி விரைந்து அவுட்டானார். பின்னர் வந்தவர்கள் அடித்து ஆடினாலும் ரன் வரவில்லை பதினைந்து ஒவருக்கு மேல் அவுட்டானாலும் பராவாயில்லை என்று இறங்கி ஜெமிமா ,ஹேமா,கவுர் ஆகியோர் அடித்து விளையாட வெற்றிக்கு பக்கத்தில் வேகமாக சென்றனர் ஆனால் கடைசியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தனர்.இதே இரு அணிகளுக்கு இடையே டெஸ்ட் மேட்ச் நடந்த போது வெறிச்சோடிக காணப்பட்ட மைதானம் போட்டியின்போது ஒரளவு நிறைந்து காணப்பட்டது ரசிகர்களும் உற்சாகம் தந்தனர்.பெண்கள் கிரிக்கெட் என்பதும் விறுவிறுப்புக்கு சுவராசியத்திற்கு பஞ்சம் இருக்காது என்பது நிருபீக்கப்பட்டுள்ளது.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ