உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி

சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி

திருமலையில் இன்று நடைபெற்ற ஒன்பது நாள் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு விழாவாக, புஷ்கரிணியில் நடைபெற்ற சக்ரஸ்நான மஹோற்சவத்தின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி பரவசமடைந்தனர்.முன்னதாக, ஸ்ரீவாரியின் அம்சமான ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வாருடன், ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்குத் திவ்ய மந்திரங்கள் முழங்க, ஸ்நபன திருமஞ்சனம் மற்றும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தன.அதன்பின்னர், சுவாமி புஷ்கரிணி புனித தீர்த்தத்தில் சக்கரத்தாழ்வாருக்கு பக்தி சிரத்தையுடன் தீர்த்தவாரி நடைபெற்றது. அந்தச் சுபமுகூர்த்தத்திற்காகக் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'கோவிந்தா... கோவிந்தா...' என பக்திப் பரவசத்துடன் கோஷமிட்டு, புனித தீர்த்தத்தில் நீராடினர்.இந்நிகழ்விற்குப் பிறகு பேசிய திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரா மற்றும் கூடுதல் முதன்மை நிர்வாக அதிகாரி வெங்கையா சௌதரி ஆகியோர், இந்த வருடாந்திரப் பெருவிழா பெரும் வெற்றி பெற ஒத்துழைத்த தேவஸ்தான ஊழியர்கள், காவல் துறையினர், ஸ்ரீவாரி சேவகர்கள் மற்றும் குறிப்பாகப் பக்தர்கள் அனைவருக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !