உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்திப்போமா / வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு விமோசனம் கிடைப்பது எப்போது?

வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு விமோசனம் கிடைப்பது எப்போது?

வியாசர்பாடி, வியாசர்பாடி -- எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் பழமை வாய்ந்த வியாசர்பாடி காவல் நிலையம் செயல்பட்டது. காவல் நிலையம் சிதிலமடைந்ததையடுத்து, 2003ல் இருந்து காவல் நிலையம் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் மாற்றப்பட்டது. பொதுமக்களுக்கு அமர இடவசதி, கழிப்பறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இன்றி செயல்பட்டது.கடந்த 2022 செப்டம்பர் மாதம், காவல் நிலையத்தில் சீலிங் திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், சாமந்தி பூ காலனியில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் உள்ள விளையாட்டு வீரர் ஓய்வறைகள், தற்காலிக காவல் நிலையமாக மாற்றப்பட்டது.தற்போது தரை தளத்தில் வியாசர்பாடி காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு பிரிவும்; முதல் தளத்தில் குற்றப்பிரிவும் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் பெய்த மழையில், மைதானம் வெள்ளக்காடாக மாறி உள்ளது. போலீஸ் வாகனங்கள் அதில் சிக்கும் நிலைமை உள்ளது. அதுமட்டுமல்லாமல், புகார் கொடுக்க வரும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால், அடிப்படை வசதிகளுடன் வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு சொந்தமாக புது கட்டடம் கட்டித்தர வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:கடந்த ஒரு வாரமாக தேங்கி நிற்கும் மழைநீரால், மைதானத்தை விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கால்பந்தாடும் போது பந்து காவல் நிலையம் நோக்கி சென்றால், போலீசார் திட்டுகின்றனர். 2 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட கால்பந்தாட்ட மையம், தற்போது அடிப்படை வசதிகள் இன்றி படுமோசமான நிலையில் உள்ளது. எனவே காவல் நிலையம் இடமாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை