மேலும் செய்திகள்
நாரதர் பேச்சு நன்மைக்கே!
28-Sep-2025
கொங்கு தேன் சுவைத்தேன்!
27-Sep-2025
மிஸ் தமிழ்நாடு கிறிஸ்லின் இமிமா
21-Sep-2025
கல்லிலே ஓவியம் கண்ட ரத்தினம்
21-Sep-2025
அண்ணாந்து பார்க்கும் போது தான் அதிசயங்கள் நமக்கு தெரியவரும். நெடிதுயர்ந்த மரங்கள், அதற்குள் ஒளிந்தும் பறந்தும் விளையாடும் பறவைகள், வட்டமடிக்கும் தட்டான்கள், சுள்ளென்ற வெயில், இதமான நிலவொளி, இனிய மழைநீர், திகட்டாத வானவில் இவையெல்லாம் சமவெளி கண்களுக்கு எட்டாத அற்புதங்கள். 1990கள் வரை பிறந்த குழந்தைகள் ரோட்டில் விளையாடும் போது இந்த அதிசயங்களை பார்த்து அதிசயித்தனர். பெருமை பேசும் '2 கே' குழந்தைகள் அலைபேசியை தாண்டி வெளியே வருவதில்லை. இவர்களின் இயற்கை உணர்வை மீட்கும் வகையில் குழந்தைகளுக்கான கவிதைப்பாட்டு புத்தகம் எழுதியுள்ளார் மதுரை வலையங்குளத்தைச் சேர்ந்த சாந்தி சந்திரசேகர். கவிதையும் சிந்தனையும் இவரைப் போலவே பாந்தமாக உலாவருகிறது கவிதை நுாலில். 'மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்… சேலத்து மாம்பழம்' எழுதிய கவிஞர் அழ வள்ளியப்பா போல எளிய மரபு நடையில் பறவை பாடல்கள் குறித்து குழந்தைகளுக்காக எழுதி புத்தகமாக வெளியிட்ட சாந்தி சந்திரசேகரோடு ஒரு கலந்துரையாடல்…குழந்தைகளுக்கான மரபுக்கவிஞராக உருவானது எப்படி? பெண்களுக்காக எழுத நிறைய பேர் உள்ளனர். குழந்தைகளுக்காக எழுதுவது குறைந்து விட்டது. அந்த குறையை போக்க கவிதை வடிவில் துவக்கி வைத்தேன்.சிறுவர் இலக்கிய உலகம் எப்படி உள்ளது?'பாப்பாவுக்கு பறவை பாட்டு' மரபுப்பாடல் கவிதை தான் குழந்தைகளுக்காக நான் எழுதிய முதல் புத்தகம். அதற்கு முன் நிறைய கவிதைகள் எழுதியுள்ளேன். குழந்தைகளுக்காக எழுதும் போது அவர்களாக வாழும் சந்தோஷம் மீண்டும் கிடைக்கிறது. பறவைகளை குழந்தைகளுடன் தொடர்புபடுத்தியது?கவிதை எழுதுவேனே தவிர மரபுச் செய்யுள் பழகவில்லை. ஒரு விழாவில் கவிஞர் ராமஇளங்கோவை சந்தித்து அவரிடம் மரபுக்கவிதை பயின்றேன். தினமும் ஒரு தலைப்பு கொடுத்து கவிதை எழுதச் சொல்வார். அப்படி பறவைகள் பற்றிய குறிப்பில் தோன்றியது தான்… 'பாப்பாவுக்கு பறவைப்பாட்டு' புத்தகம்.எத்தனை பறவைகளைப் பற்றி என்னென்ன தகவல்கள் உள்ளன?குழந்தைகளுக்கு தெரிந்த மயில், குயில், மீன்கொத்தி, பச்சை புறா பற்றியும் பனங்காடை, பஞ்சுருட்டான் குருவி, தையற்சிட்டு, தவிட்டு குருவி, கரிச்சான் குருவி, உழவாரக்குருவி என 50 வகை குருவிகளை பற்றி பாடல் எழுதியுள்ளேன். பறவைகளின் வண்ணப்படங்களுடன் விளக்கமும் குழந்தைகளுக்கு பிடித்த சந்த வரிகளில் பறவைகளின் குணாதிசயம் பற்றி மரபு பாடல் எழுதியுள்ளேன். புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் 'அறமனச்செம்மல்' சீனு சின்னப்பா இலக்கிய விருது 2024க்கு சிறுவர் இலக்கிய பிரிவில் இந்த புத்தகம் தேர்வானதை பெருமையாக நினைக்கிறேன். அதுவும் முதல் படைப்பிற்கே கிடைத்து என்னை இளமையாக்குகிறது.இதற்கு முன்பே புத்தகங்கள் எழுதியுள்ளீர்களா?பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் உலக சாதனை வினைத்திறன் என்று ஒரே நேரத்தில் 133 புத்தகங்களை வெளியிட்டனர். அதில் நான் எழுதிய புதுக்கவிதை தொகுப்பு, 18 சிறுகதைகளின் தொகுப்பு என 6 புத்தகங்களை வெளியிட்டேன்.எழுத்து எப்போது வசமானது?நடுத்தரக் குடும்பம். டிகிரி முடித்து திருமணம், ஆசிரியப்பணி என தொடர்ந்தேன். என் உணர்வுகளை கவிதையாக எழுதி கொண்டே இருந்தேன். குடும்ப விழாக்களில் கவிதை வாசிப்பேன். இவற்றை நானே புத்தகமாக்கி தருகிறேன் என கணவர் சந்திரசேகர் உறுதியளித்தார். தனியார் வேலையை விட்ட பின் வீட்டுப்பணியோடு கவிதையுடன் உறவாடினேன். என் வசமான எழுத்துகளை தன் வசமாக்கி புத்தகமாக வெளியிட உதவினார் கணவர்.எழுத்துப் பயணத்தின் அடுத்த அடி...?விலங்குகள், மலர்கள் படங்களை சேகரிக்கிறேன். காய்கள், கீரைகள், மூலிகைகள் பற்றி ஆவணப்படுத்த உள்ளேன். மரபுப்பாடல் விதிகளுடன் அவ்வையாரின் கொன்றைவேந்தன், ஆத்திச்சூடி வரிகளுக்கும் தனித்தனி கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் புத்தகமாக வெளிவரும். பதின்ம சிறுவர்களுக்காக ' பறக்கப் பழகு...' தலைப்பில் 67 சிறுகதைகளின் தொகுப்பு வெளியிட உள்ளேன். திருநங்கைகளை வெறுக்கக்கூடாது, பெரியவர்களுக்கு மரியாதை தர வேண்டும் என வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள், அதற்கான நீதி குறித்து எழுதுகிறேன். சிறுவர் உலகம் சிந்தனைகளை புடம் போடும். அந்த உலகத்திற்குள் கவிதையாய் பயணிக்கவே விரும்புகிறேன் என்றார்.இவரிடம் பேச: 81242 45243.
பொன்னு ருண்டை போலவே மின்னுகின்ற காடையே என்னிரண்டு கண்களும் உன்னைக் கண்டு மகிழுதே… தைதை தைதை தையக்கா தையர் குருவி பாரக்கா பைபோல் இலையைப் பின்னித்தான் பையப் பையக் கோப்பைபோல்..!
28-Sep-2025
27-Sep-2025
21-Sep-2025
21-Sep-2025