மேலும் செய்திகள்
நாரதர் பேச்சு நன்மைக்கே!
28-Sep-2025
கொங்கு தேன் சுவைத்தேன்!
27-Sep-2025
மிஸ் தமிழ்நாடு கிறிஸ்லின் இமிமா
21-Sep-2025
கல்லிலே ஓவியம் கண்ட ரத்தினம்
21-Sep-2025
மகாராஷ்டிரா மாநிலம் டூகரா கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து கடின உழைப்பு, முயற்சியால் யுனெஸ்கோ, ஆசியா விருது என உலகளவில் சிறந்த கடலோர மேலாண்மை, கடல்வாழ் உயிரின பாதுகாப்பு அதிகாரியாக விருதுகளை பெற்று நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார் ராமநாதபுரம் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பாளர் மற்றும் அறக்கட்டளை இயக்குனர் ஜக்தீஷ் சுதாகர் பகான் என்ற ஐ.எப்.எஸ்., அதிகாரி...மன்னார் வளைகுடாவில் அடங்கிய ராமநாதபுரம், துாத்துக்குடி கடற்கரைப் பகுதிகளில் 21 தீவுகள் இருக்கின்றன. 117 வகையான பவளப்பாறைகள் காணப்படுகின்றன. இந்த உயிர்கோள காப்பகத்தில் கடல் பாசி, கடல்புற்கள், சங்குகள், ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரியவகை உயிரினங்கள் வாழ்கின்றன. பாலுாட்டி இனங்களைச்சேர்ந்த கடல் பசு, டால்பின்கள் காணப்படுகின்றன.இந்த உயிர்கோள காப்பகத்தின் காப்பாளரான ஜக்தீஷ் சுதாகர்பகான் சீரியப்பணியால் சதுப்பு நில மாங்குரோவ் காடுகளும் அதிகரித்துள்ளது. கடல் பசு, டால்பின் வாழ்விடங்களில் செயற்கைபவளப்பாறைகள், கடற்புல் வளர்த்து மேம்படுத்தியுள்ளார்.வலையில் பிடிக்கப்பட்ட 102 அரிய வகை உயிரினங்களை மீட்டு கடலில் விடப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட 12,000 கிலோ கடல் அட்டை, கடல் குதிரைகளை பறிமுதல் செய்துள்ளார். 23,500 ஆமை குஞ்சுகள் வளர்க்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளது.பிரான்ஸ் பாரிஸ் நகரில் யுனெஸ்கோ அமைப்பின் சார்பில் 2004 முதல் மைக்கேல் பட்டீஸ் என்ற பெயரில் ஆண்டுதோறும் சிறந்த உயிர்கோள காப்பக மேலாண்மைக்கான விருது வழங்கப்படுகிறது. 2023க்கான விருதிற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த உயிர்கோள காப்பக அதிகாரிகள் விண்ணப்பித்தனர். இதில் ஜக்தீஷ் சுதாகர் பகான் முதல் இந்தியராக இந்த விருது பெற்றுள்ளார். தாய்லாந்தில் குளோபல் 'வைல்டுலைப்' கருத்தரங்கில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறந்த சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான விருதும் பெற்றுள்ளார்.இத்தாலி நாட்டின் உலக உணவு திட்டம் அமைப்பு இந்தியாவில் பருவநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் 3 மாவட்டங்களில் கிராமங்களை மேம்படுத்த தேர்வு செய்துள்ளது. இதில் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளராக ஜக்தீஷ் சுதாகர் பகான் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கூறியதாவது: மும்பையில் பி.இ., (கெமிக்கல் இன்ஜினியர்) பட்டம் பெற்று 2010 - 2017 வரை ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். 2016ல் யு.பி.எஸ்.சி., தேர்வில் ஐ.எப்.எஸ்., வென்று உத்தரகண்ட் மாநிலம் டெஹராடூனில் இந்திரா காந்தி நேஷனல் பாரஸ்ட் அகடாமியில் பணிபுரிந்தேன். 2019ல் தமிழக வனத்துறையில் இணைந்தேன். 2021 முதல் ராமநாதபுரம் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பாளர், அறக்கட்டளை இயக்குனராக பணிபுரிகிறேன்.தனுஷ்கோடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை மையம், காரங்காடு, உப்பூர், மண்டபம், பகுதிகளில் கடல் அரிப்பை தடுக்க மாங்குரோவ் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மன்னார்வளைகுடா உயிர்கோள அறக்கட்டளை சார்பில் மீன் உணவு தயாரித்தல், வலை பின்னுதல் என சிறுதொழில் துவங்கி ஆயிரக்கணக்கான பெண்கள் பயன் பெற்றுள்ளனர் என்றார்.
28-Sep-2025
27-Sep-2025
21-Sep-2025
21-Sep-2025