சிரியாவில் சிக்கிக் கொண்ட 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
பெய்ரூட் : சிரியா நாட்டில் சிக்கிக் கொண்ட 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்களில் 44 பேர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சிரியாவில் உள்ள புனிதத்தலங்களை பார்வையிட சென்றிருந்தனர். இவர்கள் அனைவரும் சிரியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் மீட்கப்பட்டு பஸ் மூலம் லெபனான் நாட்டின் பெய்ரூட் நகருக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் லெபனான் நாட்டுக்கானஇந்திய தூதர் நூர் ரஹ்மான் வரவேற்றார். அவர்கள் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தார். விரைவில் அவர்கள் விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவர் என தெரிவித்தார். - நமது செய்தியாளர் காஹிலா