துபாயில் சுற்றுச்சூழல் தொடர்பான பேச்சுப் போட்டி
துபாய் : துபாய் ஜெம்ஸ் மாடர்ன் அகாடமியில் அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் சுற்றுச்சூழல் தொடர்பான பேச்சு போட்டி கடந்த 13 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடந்தது. இந்த போட்டியில் 94 குழுவைச் சேர்ந்த 612 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்கள் ஆங்கிலம் மற்றும் அரபி மொழியில் சுற்றுச்சூழல் குறித்து பேசினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த போட்டியில் மாணவ, மாணவியர் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது. இந்த போட்டி கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 1,659 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 11,255 மாணவ, மாணவியர் பங்கேற்று சிறப்பித்துள்ளனர். போட்டியில் பங்கேற்ற மாணவர் ஒருவர் இந்த போட்டியானது தங்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவியாக இருப்பதாக தெரிவித்தார். - நமது செய்தியாளர் காஹிலா