உள்ளூர் செய்திகள்

துபாய் உள்ளிட்ட அமீரகத்தில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாட்டம்

துபாய் : துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 10.04.2024 புதன்கிழமை ஈகைத் திருநாள் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி காலையில் பொதுமக்கள் காலையில் புத்தாடை அணிந்து பள்ளிவாசலில் நடந்த சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். அதன் பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பின்னர் மதியம் பெரும்பாலான இடங்களில் பிரியாணி விருந்து நடந்தது. இதில் சகோதர சமுதாய நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர். ஈகைத் திருநாளையொட்டி பூங்கா உள்ளிட்ட பொழுது போக்கு இடங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்