மஸ்கட்டில் முதலாவது இ-பாஸ்போர்ட் வழங்கல்
மஸ்கட்டில் முதலாவது இ-பாஸ்போர்ட் வழங்கல்மஸ்கட் : மஸ்கட்டில் முதலாவது இ-பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் ஜி.வி.ஸ்ரீனிவாஸ் பயனாளர்களுக்கு இ-பாஸ்போர்ட்களை வழங்கினார்.இந்த பாஸ்போர்ட்டில் சிப் பொருத்தப்பட்டு பயனாளர்களின் கை ரேகை உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளதால் விமான நிலையங்களில் இமிக்ரேசன் தொடர்பான பணிகளை விரைவாக முடித்து வெளியே செல்ல உதவியாக இருக்கும்.மேலும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களையும் இது கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.----மஸ்கட்டில் இருந்து நமது செய்தியாளர் காஹிலா