உள்ளூர் செய்திகள்

குவைத்தில் இலவச மருத்துவ முகாம்

குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் மற்றும் ஷிஃபா அல் ஜஸீரா மருத்துவமனை இணைந்து மாபெரும் ஆறாம் ஆண்டு இலவச மருத்துவ முகாமை ஃபாஹாஹீலில் உள்ள ஷிஃபா அல் ஜஸீரா மருத்துவமனையில் நடத்தியது. இதில் 250 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டார்கள் . இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக குவைத் இலங்கை தூதரக பொறுப்பு அதிகாரி N .L. அப்துல் ஹலீம் கலந்து கொண்டார். இந்த இலவச மருத்துவ முகாமை ஷிஃபா அல் ஜஸீரா மருத்துவமனையின் நிறுவனர் Dr.ரபியுல்லா, மருத்துவமனையின் நிர்வாக மேலாளர் திரு. குணசீலன் பிள்ளை, மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளோடு குவைத் தமிழ் மக்கள் சேவை மையத்தின் தலைவர் ரகுமான், செயலாளர் கௌதம், ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரசீத், அபுதாஹீர், ஹாலிக், செல்வராஜ், சமூக சேவகர் அலிபாய் மற்றும் தமிழ் மக்கள் சேவை மையத்தின் நிர்வாகிகள் இணைந்து மிகச் சிறப்பாக செய்திருந்தனர். - நமது செய்தியாளர் செல்லதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்