ஜெத்தாவில் ஹோலிப் பண்டிகை
ஜெத்தா : சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் உள்ள இந்தியன் கன்சுலேட்டில் வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் இந்திய கன்சுலேட் ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்கிடையே வண்ணங்களை பூசி மகிழ்ந்தனர். - நமது செய்தியாளர் காஹிலா