அஜ்மானில் இந்திய குடியரசு தின விழா
அஜ்மான்: அஜ்மான் இந்திய சங்கத்தில் இந்தியாவின் 76வது குடியரசு தின விழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்திய சங்க தலைவர் அப்துல் சலா தலைமை வகித்தார். இந்திய துணைத் தூதரக அதிகாரி சிறப்பு விருந்தினராகபங்கேற்று இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பொதுச் செயலாளர் ரூப் சித்து நன்றி கூறினார். சாயாதேவி உள்ளிட்ட நிர்வாகக்குழுவினர் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர். - நமது செய்தியாளர் காஹிலா