துபாயில் இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா
துபாய்: துபாய் இந்திய துணை தூதரகத்தில் இந்திய துணைத் தூதர் சதீஷ்குமார் சிவன் இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.அதன் பின்னர் இந்திய ஜனாதிபதியின் சுதந்திர தின உரையிலிருந்து முக்கிய பகுதிகளை துணைத் தூதர் வாசித்தார்.இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் பள்ளிக்கூட மாணவ, மாணவியரின் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் நடந்தது.இந்த நிகழ்ச்சியில் துணைத் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.- நமது செய்தியாளர், காஹிலா.