குவைத்தில் பிரதமர் மோடி வரவேற்று கோலாகலம்
என்றுமில்லா கோலாகலத்துடன் குவைத் நாடு! அங்கு திருவிழாக்கோலம்!.அதற்கு காரணம் நம் பிரதமர் மோடி! மோடி, குவைத் தவிர அநேகமாய் அனைத்து அரபு நாடுகளுக்கும் இதற்கு முன்பு விஜயம் செய்திருக்கிறார். இப்போது டிசம்பர் 21ல் குவைத்திற்கும்! **43 வருடங்களுக்குப் பிறகு குவைத் செல்லும் இந்திய பிரதமர் இவர்! **அவரது இரண்டு நாள் பயணத்தை குவைத் உற்சவமாக்கி இருக்கிறது. சிவப்பு கம்பளம்! **பொது போக்குவரத்து பஸ்களும் “மோடி வெல்கம்” என ஊரை சுற்றிச்சுற்றி வருகின்றன. **குவைத்தின் 50 லட்சம் ஜனத்தொகையில் இந்தியர்கள் 10+L-க்கள்! அங்கு வெளிநாட்டவர் எண்ணிக்கையில் இந்தியருக்கு முதலிடம். முன்னுரிமை! ** இந்த தருணத்தில் இரு நாடுகளுக்கிடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. **அரசு முறை பயணம் என்றாலும்கூட, இந்திய தூதரக ஏற்பாட்டில் பிரமாண்ட கூட்டத்தில் மோடி பேசுகிறார். அதற்கு பாஸ் கிடைக்காதா என மக்கள் பெரும் அலைச்சலில்! **அத்துடன் பாலைவனத்தில் இருக்கும் தொழிலாளர்களின் காம்ப்களுக்கும் மோடி விஜயம் ! **இதற்காக படு சுமாராய் இருக்கும் அந்த பகுதி சாலைகள் வேக வேகமாய் செப்பனிடப் படுவது ஆச்சர்யம். பெருமிதம்! **மீடியாக்கள் வெகு சுறுசுறுப்பு! பத்திரிகைகள் மோடிக்காக சிறப்பு மலர்கள் வெளியிடுகின்றன. அப்படி சிறப்பு மலர் வெளியிடும் பிரபல TheTimes இதழ் அங்குள்ள Indian Frontliners சேவை அமைப்பின் நிறுவனரான என்னிடமும் வாழ்த்து செய்தி கேட்டுள்ளது. என். சி. மோகன்தாஸ்; படங்கள்: வேங்கட மதி