உள்ளூர் செய்திகள்

இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவருக்கு வரவேற்பு

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி நகருக்கு வருகை தந்துள்ள இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர் டாக்டர் சேமுமு முஹம்மது அலி மற்றும் பொருளாளர் எஸ். எஸ் ஷாஜஹான் ஆகியார்க்கும அய்மான் சங்கத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அய்மான் பைத்துல் மால் தலைவர் ஏ.அதிரை சாகுல் ஹமீது ஹாஜியார் அய்மான் சங்கம் அபுதாபியில் செய்து வரும் செயல்பாடுகளை எடுத்துரைத்தார். இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் தமிழகத்தில் செய்து வரும் சமூகப் பணிகளையும் தலைவர் டாக்டர் சேமுமு முகமது அலி விளக்கினார். டாக்டர் சேமுமு முஹம்மது அலி மற்றும் பொருளாளர் எஸ். எஸ் ஷாஜஹானுக்கு அய்மான் சங்கத்தின் சார்பில் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது. தமிழகத்தில் திருச்சியில் எதிர்வரும் மே மாதம் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் நடக்க இருக்கும் ஒன்பதாவது மாநாட்டிற்கு அய்மான் சங்கத்தின் தலைவர் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் அழைப்பிதழ் வழங்கினர். வரவேற்பு நிகழ்ச்சியில் அய்மான் நிர்வாகிகள் அனைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !