அபுதாபி முசபாவில் கலக்கல் பெண்கள் தீபாவளி கொண்டாட்டம்
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபி, முசாபாவில் தீபாவளி திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கலக்கல் பெண்கள் மையக்குழு உறுப்பினர்கள் காயத்திரிசெந்தில், நாசியா உமார், காயத்திரி ஆனந்து, லோகநாயகி கணேஷ் ஆகியோரால் விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. விளையாட்டு போட்டிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் அபுதாபி முசாபா தமிழ் பெண்கள் கலந்துகொண்டு தீபாவளி பண்டிகையை வெகுசிறப்பாக கொண்டாடினார்கள். - துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா