உள்ளூர் செய்திகள்

சிங்கப்பூர் ஆலய திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா கோலாகலம்

“ ஓம் ஸ்ரீ விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமிக்கு ஜே .....ஓம் ஸ்ரீ மூகாம்பிகை அம்பிகையே சரணம்...சரணம் “ என பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களின் சரண கோஷம் முழங்க - கருட பகவான் மும்முறை வலம் வந்து வட்டமிட்டு ஆசிர்வதிக்க - சிங்கப்பூர்ப் பிரதமர் மாண்'பமை லாரன்ஸ் வோங் சிறப்பு விருந்தினராய்ப் பங்கேற்க சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலய ஜீரணோத்தாரண சொர்ண பந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா பிப்ரவரி 9 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 48 நாட்கள் பூர்வாங்க யந்திர பூஜைகள் சர்வ சாதகம் சிவாகம ரத்ன சிவாகமப் பிரவீண நாகராஜ சிவாச்சாரியார் தலைமையில் இந்தியாவிலிருந்து வருகை புரிந்துள்ள வேத விற்பன்னர்களின் துணையோடு நடைபெற - மார்ஷலிங் பகுதியே விழாக் கோலம் பூண மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வைகறையிலேயே மக்கள் வெள்ளம் திரள ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சுரேஷ் குமார் கொடி அசைக்க ஆலயப் பிரதான கலசத்திற்குத் தலைமை அர்ச்சகர் நன்னீராட்ட மற்ற மூர்த்திகளின் சன்னதிகளிலும் திருக்குட நன்னீராட்டு விழா கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற்றது. காலை 8 மணியளவில் சிவாச்சார்யார்களால் கடம் புறப்பட்டு சரியாக 9 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க மூன்றடுக்கு கோபுரத்தின் ஏழு கலசங்களிலும் திருக்குட நன்னீராட்டு நடைபெற்றமை மெய்சிலிர்க்க வைத்தது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரதமர் மூல தெய்வ வழிபாடு நடத்தினார். ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சுரேஷ் குமார் விளக்க ஆலயத்தைச் சுற்றிப் பார்த்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.வைகறையில் 4 மணிக்கு யாக சாலை பூஜைகள் தொடங்கி தமிழகத்திலிருந்து வருகை புரிந்துள்ள நாற்பதுக்கு மேற்பட்ட சிவாச்சார்யர்கள் குடமுழக்கு விழாவை நடத்தினர். சிங்கப்பூரிலுள்ள 27 ஆலயங்களிலிருந்து வரிசைகள் சமர்ப்பிக்கப்பட்டன. காலையிலிருந்தே காத்திருந்த பகதப் பெருமக்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டதோடு ஒரே நேரத்தில் 1000 பேர் அமர்ந்து உணவருந்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எவ்வித அசௌகர்யங்களுமின்றிப் பாது காத்த தொண்டூழுியர்கள் சேவை பாராட்டத் தகுந்தது. பிரதமருக்குப் பரிவட்டம் கட்டி பொன்னாடை மாலை அணிவித்துக் கவுரவிக்கப்பட்டது.. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவு பலித்தது.ஆலய நிர்வாகத்தினரின் அயரா உழைப்பும் சிவாச்சார்யார்களின் உருக்கமான வழிபாடுகளும் சிங்கப்பூரில் மேன்மைகொள் சைவ நீதியையும் வைகானஸ ஆகம வழபாட்டையும் இணைக்கும் சமய நல்லிணக்க ஆலயத்தைப் பல்லாண்டு பல்லாண்டு சழிக்கச் செய்யட்டும். - நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்