டைட்டிலுக்கு எதிர்ப்பு; படக்குழு விளக்கம்
ADDED : 1497 days ago
வரதராஜ் எழுதி, இயக்கி தயாரித்துள்ள படத்திற்கு, ‛பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே சரக்கு மற்றும் சேவை வரி உள்பட' என தலைப்பு வைத்துள்ளனர். சின்னத்திரை புகழ் ராஜ்கமல் நாயகனாக நடிக்க ஸ்வேதா பண்டிட் நாயகியாக அறிமுகமாகிறார். பெண்களுக்கு எதிராக வருகிறோம் எனக்கூறி கொண்டு அதன் மூலம் காசு பார்க்கும் கூட்டத்தில் இப்படமும் ஒன்று என எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால், படக்குழு இதை மறுத்துள்ளது.
அவர்கள் கூறுகையில், ‛ஆபாசமின்றி படத்தை எடுத்துள்ளோம். இப்படத்தை பார்க்கும் போது, இது பெண்களுக்கு ஆதரவான, எச்சரிக்கை தரும் படம் என புரியும். இன்று பெண்களுக்கு எதிரான ஒரு கும்பல் உலாவுகிறது அதை இப்படம் தோலுரிக்கும்' என்றனர்.