அக்டோபர் 18ல் வெளியாகும் விமலின் ‛சார்'
ADDED : 370 days ago
கன்னிமாடம் என்ற படத்தை இயக்கிய நடிகர் போஸ் வெங்கட், அதையடுத்து விமல் நடிப்பில் ‛சார்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்திருக்கும் இப்படத்தில் விமலுடன் சாயாதேவி, சிராஜ், சரவணன், ரமா உள்ளிட்ட பலர் நடிக்க, சித்து குமார் இசையமைத்திருக்கிறார். இப்படம் அக்டோபர் 18ம் தேதி திரைக்கு வருவதாக ஒரு போஸ்டர் மூலம் அறிவித்திருக்கிறார் இயக்குனர் போஸ் வெங்கட்.
மேலும் ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வரும் நிலையில் அக்டோபர் 11ம் தேதி ஜீவா நடித்துள்ள பிளாக் என்ற படம் வெளியாகிறது. அந்த வகையில் வேட்டையன் வெளியான ஒரே வாரத்தில் விமல் நடித்துள்ள சார் படம் வெளியாக உள்ளது.