2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ?
ADDED : 32 minutes ago
2025ம் ஆண்டில் இதுவரையில் வெளியான படங்களில் ஹிந்திப் படமான 'சாவா' படம் 800 கோடி வசூலைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அப்படத்திற்குப் பிறகு இரண்டாவது இடத்தில் 717 கோடி வசூலுடன் 'காந்தாரா சாப்டர் 1' இரண்டாம் இடத்தில் உள்ளது. இப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன பிறகும் வரவேற்பு குறையாமல் உள்ளது.
இன்றும், நாளையும் விடுமுறை நாட்கள், அதற்கடுத்து திங்கள் கிழமை தீபாவளி விடுமுறை நாள், தமிழகத்தில் செவ்வாய் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அக்டோபர் 22ம் தேதிதான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. எனவே அடுத்தடுத்து இந்தியா முழுவதும் தீபாவளி விடுமுறை என்பதாலும், குடும்பத்துடன் பார்க்கும்படியான படமாக இந்த ஒரு படம் மட்டுமே இருப்பதாலும் 'சாவா' வசூலை நிச்சயம் கடக்கும் என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.