உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி

மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகர்ஜூனா, தனது 100வது படத்தை எட்டி உள்ளார். இந்த படத்தை தமிழில் ‛நித்தம் ஒரு வானம்' படத்தை இயக்கிய ரா.கார்த்திக் இயக்குகிறார். கடந்த வாரம் இந்த படத்தை பூஜை நிகழ்வுடன் துவங்கியுள்ளனர். இதை அன்னபூர்ணா ஸ்டுடியோ தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கிறார்.

குடும்ப கதைக்களத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் இடம் பெறுகின்றனராம். முதல் நாயகியாக தபு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியானது. தொடர்ந்து இப்போது மற்றொரு நாயகியாக அனுஷ்கா ஷெட்டி நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நாகர்ஜூனா, அனுஷ்கா இருவரும் சூப்பர், டான், ரகடா, டமாருக்கா போன்ற படங்களில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர சில படங்களில் சிறப்பு ரோலில் நாகார்ஜூனாவின் படத்தில் அனுஷ்கா நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !