உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பைக்கர்' படத்திற்காக 22 கிலோ எடை குறைத்த சர்வானந்த்

'பைக்கர்' படத்திற்காக 22 கிலோ எடை குறைத்த சர்வானந்த்


'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர் தெலுங்கு இளம் நடிகர் சர்வானந்த். அதை தொடர்ந்து தமிழில் ஒன்று இரண்டு படங்களில் நடித்தாலும் தெலுங்கில் தொடர்ந்து சீரான இடைவெளியில் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தெலுங்கில் சர்வானந்தின் நடிப்பில் 'பைக்கர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. பைக் ரேஸ் சம்பந்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார். மாளவிகா நாயர் கதாநாயகியாக நடிக்க டாக்டர் ராஜசேகர் மற்றும் அதுல் குல்கர்னி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் மூன்றாம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.

இந்த படத்திற்காக கடின உழைப்பை கொடுத்துள்ள சர்வானந்த், படத்தில் 18 வயது டீன் ஏஜ் பையனாகவும் 30 வயது இளைஞனாகவும் என இருவித தோற்றங்களில் நடித்துள்ளார். இதற்காக கடும் உடற்பயிற்சி செய்து கிட்டத்தட்ட 22 கிலோ எடையை குறைத்து நடித்துள்ள சர்வானந்த், ''என் திரையுலக பயணத்தில் இதுதான் எனது சிறந்த படம் என பெருமையுடன் சொல்வேன்'' என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !