உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லவ் இன்சூரன்ஸ் கம்பெனி தள்ளிப்போக வாய்ப்பு : விலகி நிற்கும் பிரதீப் ரங்கநாதன்

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி தள்ளிப்போக வாய்ப்பு : விலகி நிற்கும் பிரதீப் ரங்கநாதன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'.

கடந்த வருடம் இரண்டு முறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட படம். இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட சிக்கல் தான் படம் தள்ளிப் போனதற்குக் காரணம் என்றார்கள். ஒரு வழியாக அந்த பஞ்சாயத்துகள் முடிந்து படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என கடந்த வாரம் அறிவித்தார்கள்.

அதற்கான சமூக வலைத்தள பதிவுகளில் ஒன்றைக் கூட பிரதீப் ரங்கநாதன் அவரது எக்ஸ், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் 'ஷேர்' செய்யவில்லை. படம் தள்ளிப் போனதன் காரணமாக படக்குழுவுடன் அவர் இணக்கமாக இல்லை என்கிறார்கள்.

நாயகனாக இதுவரையில் மூன்று படங்களில்தான் நடித்திருக்கிறார் பிரதீப். பெரிய பேனர், பிரபல இயக்குனர், பிரபல இசையமைப்பாளர் என இணைந்துள்ள தனது படத்திற்காக ஒரு பதிவு கூட அவர் போடாதது திரையுலகினரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வளர்ந்து வரும் போதே இப்படி நடந்து கொள்வதா என சிலர் கிசுகிசுக்கிறார்கள்.

மேலும், இந்தப் படத்திற்காக பிரதீப் இதுவரையில் டப்பிங் பேசவில்லை என்றும் கூட ஒரு தகவல் இருக்கிறது. கடைசியாக வந்த தகவலின்படி படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகாமல் ஏப்ரல் 10ம் தேதிக்குத் தள்ளிப் போகலாம் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !