உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராதிகாவுக்காக 'சக்ஸஸ் பார்ட்டி' கொடுத்த ஸ்ரீப்ரியா

ராதிகாவுக்காக 'சக்ஸஸ் பார்ட்டி' கொடுத்த ஸ்ரீப்ரியா

சீனியர் நடிகையான ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'தாய் கிழவி' படம் 75 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதைக் கொண்டாடும் விதத்தில் ராதிகாவைப் பாராட்டி அவருக்காக ஒரு 'சக்ஸஸ் பார்ட்டி' கொடுத்துள்ளார் அவரது தோழியும் சீனியர் நடிகையுமான ஸ்ரீப்ரியா.

இந்த விருந்தில் நடிகைகள் லதா, ஜெயசுதா, கீதா, ஷோபனா, லிஸி, பூர்ணிமா பாக்யராஜ், மீனா, நடிகர்கள் சரத்குமார், பாக்யராஜ், 'தாய் கிழவி' படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான சிவகார்த்திகேயன் மற்றும் சில சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அனைவரும் ராதிகாவை வாழ்த்தி பூங்கொத்து கொடுத்து சிறப்பித்தனர்.

இந்த ஆண்டில் இதுவரையில் வெளிவந்த படங்களில் அதிக லாபத்துடன் அதிக வசூலைக் கொடுத்த படமாக 'தாய் கிழவி' படம் இருக்கிறது. நடிகைகள் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த படங்களில் தமிழ் சினிமாவில் அதிக வசூலைக் குவித்த படமாக இப்படம் அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !