லண்டன் இல்ல... கீர்த்தி சுரேஷ் போனது கனடாவுக்கு...
நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்றுமுன்தினம் விமானத்தில் வெளிநாடு கிளம்பினார். அந்த வீடியோ,போட்டோவை பார்த்தவர்கள் அவர் லண்டன் போகிறார் என கதை விட்டார்கள். அவரோ அதற்கு டோரதி படத்தின் பிரிமியர் கனடாவில் தானே நடக்குது, லண்டனிலா நடக்குது என்ற ரீதியில் சோஷியல் மீடியாவில் பதில் அளித்து இருந்தார்.
இந்நிலையில் கனடாவில் நடந்த டொரோன்டோ சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட டோரதி படத்தின் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்ட போட்டோ, வீடியோ வைரலாகி வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ரிஷிகாந்த், சனந்த் நடிக்கிறார்கள்.
டோரதி என்பது கீர்த்தி சுரேஷின் கேரக்டர் பெயர். என் படங்கள் இப்படி திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்டது இல்லை. இந்த கதை, சில விஷயங்களுக்காக இப்படி செய்கிறோம். செப்டம்பர் 25ம் தேதி டோரதி தியேட்டரில் வெளியாகிறது என்று இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார். அவரும், ஹீரோக்கள் ரிஷிகாந்த், சனந்த் ஆகியோரும் கனடா விழாவில் பங்கேற்றனர். உலகில் நடக்கும் முக்கியமான 5 திரைப்பட விழாக்களில் டொரோன்டோ விழாவும் ஒன்று. அதனால், இந்த படத்தில் முக்கியமான, அழுத்தமான விஷயங்கள் இருக்கிறது' என்று கூறப்படுகிறது.