ஹீரோவின் தந்தையாக நடிக்க ஒப்புக்கொண்ட அஜித் ; ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன ஆச்சரிய தகவல்
நடிகர் அஜித், 'குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து தற்போது 'டேர் டெவில்' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குகிறார். குட் பேட் அக்லி படத்திற்கு முன்பாகவே ஆதிக் ரவிச்சந்திரன் மீது தனி பாசம் வைத்திருந்த அஜித், 'நேர்கொண்ட பார்வை' படத்தின் போதே அவரை தயாரிப்பாளர் போனி கபூரிடம் அறிமுகப்படுத்தி, “இவர் வெறும் நடிகர் அல்ல.. ஒரு சிறந்த இயக்குனர்.. இவரின் இயக்கத்தில் நாம் ஒரு படம் பண்ண வேண்டும்” என்றும் சிபாரிசு செய்து இருக்கிறார்.
அது மட்டுமல்ல அப்போது ஹிந்தியில் வெளியான 'பத்தாய் ஹோ' என்கிற படத்தை பார்க்கும்படி ஆதிக் ரவிச்சந்திரனிடம் கூறினாராம் அஜித். அந்தப் படத்தின் ரீமேக் உரிமை தயாரிப்பாளர் போனி கபூரிடம் தான் இருந்தது. அதனால் அந்த படத்தை தமிழுக்கு ஏற்றபடி மாற்றும்படியும் அதில் 50 வயதான தந்தை கதாபாத்திரத்தில் தானே நடிப்பதாகவும் கூறினாராம் அஜித்.
தன்மீது இந்த அளவிற்கு அவர் அன்பு வைத்திருப்பதை பார்த்து நெகிழ்ந்து போனாராம் ஆதிக் ரவிச்சந்திரன். சில காரணங்களால் அந்த படம் அப்படியே நின்றுவிட்டது. பின்னர் அந்த படம் தான் தமிழில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் 'வீட்ல விசேஷம்' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இதில் அந்த தந்தை கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.